இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுமா? என்ன வாய்ப்புகள் உள்ளது?
இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுவதற்கான சாத்தியங்களை காணலாம்.
ஆசிய கோப்பை சூப்பர் 4
2025 ஆசிய கோப்பையின் லீக் போட்டிகள் முடிவடைந்து, சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 4 முதல் போட்டியில், வங்கதேச அணி, இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2 புள்ளிகள் மற்றும் 0.121 என்ற நிகர ரன் விகிதத்தில், புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
2வது சூப்பர் 4 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 2 புள்ளிகள் மற்றும் 0.689 என்ற நிகர ரன் விகிதத்தில், புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான்?
இன்னும் 4 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய அடுத்த வரும் 2 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்ற ஆக வேண்டிய நிலை உள்ளது.
பாகிஸ்தான் இன்றைய போட்டியில் இலங்கையையும், செப்டம்பர் 25 ஆம் திகதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும்.
அவ்வாறு நடந்தால், பாகிஸ்தான் 4 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதில் ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் பாகிஸ்தான் தனது இறுதிப்போட்டி வாய்ப்பை இழக்கும்.
இன்றைய போட்டியில், இலங்கை தோல்வியை தழுவினால், இலங்கை இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும்.
அதே போல், இந்தியா நாளையை போட்டியில் வங்கதேசத்தை வெற்றி பெற்றால், 4 புள்ளிகள் பெற்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த ஆசிய கோப்பை தொடரில், 3 வது முறையாக இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகளை ரசிகர்கள் காண வாய்ப்பு கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |