வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இலங்கை: 3 ஆண்டுகளுக்கு பின் மோதல்
இன்று நடைபெற உள்ள சூப்பர் 4 போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
நெருக்கடி
ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டி அபு தாபியில் நடக்க உள்ளது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியாவும், வங்காளதேசமும் ஒரு வெற்றியைப் பெற்று 2 புள்ளிகளை வைத்துள்ளதால் இலங்கை அணி கண்டிப்பாக இப்போட்டியில் வென்றாக வேண்டும்.
அதேபோல்தான் பாகிஸ்தானும் -0.689 ரன்ரேட்டுடன் கடைசி இடத்தில் இருப்பதால் பாரிய வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதற்கு முன்பு இந்த இரண்டு அணிகளும் 2022யில் நேரடியாக மோதின.
அதன் பின்னர் டி20 போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் மோதவில்லை.
பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப் (Haris Rauf) இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.
ஏனெனில் இதற்கு முன்பு அவர் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
நுவான் துஷாரா
அத்துடன் நடப்புத் தொடரில் இந்திய அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டார்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை நுவான் துஷாரா (Nuwan Thushara) பவர்பிளேயில் விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார்.
தற்போது ஓரளவு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராக அவர் இருக்கிறார். அபுதாபி மைதானமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக ஓட்டங்கள் எடுக்கும் இடங்களில் ஒன்றாக உள்ளது.
மெதுவாக பந்துவீசக்கூடியவர்கள் சில நேரங்களில் இங்கு சிறப்பாக விளையாட முடியும். அதே சமயம் இலங்கை அணி இந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்ற பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |