இந்தியாவின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு - தமிழக முதல்வர் ஸ்டாலின் சொத்துமதிப்பு என்ன?
ஜனநாயக சீர்திருத்த அமைப்பான ADR, ஆண்டு தோறும் இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான பணக்கார முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு
இதில், 31 மாநில முதல்வர்கள் மொத்தமாக சேர்த்து, ரூ.1632 கோடி சொத்து வைத்துள்ளனர்.
இதில், ரூ.931 கோடி சொத்துமதிப்புடன் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார். இந்த சொத்தின் பெரும்பகுதி, அவரின் ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட்(HFL) நிறுவனத்தில் இருந்து வருகிறது.
ரூ.332 கோடி சொத்துமதிப்புடன், அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பெமா காண்டு 2வது இடத்தில் உள்ளார். ரூ.51 கோடி சொத்துமதிப்புடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா 3வது இடத்தில் உள்ளார்.
ஸ்டாலின் சொத்துமதிப்பு
இந்த பட்டியலில், ரூ8.88 கோடி சொத்துமதிப்புடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 வது இடத்தில் உள்ளார்.
ரூ.15.38 லட்சம் சொத்து மதிப்புடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடைசி இடத்தில் உள்ளார்.
காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடனும், கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.1 கோடி சொத்துமதிப்புடன் கடைசிக்கு முந்தைய இடங்களில் உள்ளனர்.
குற்ற வழக்குகள்
இதே போல் அதிக வழக்குகள் உள்ள முதல்வர்கள் பட்டியலில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 72 தீவிர வழக்குகள் உட்பட மொத்தம் 89 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 11 தீவிர வழக்குகள் உட்பட 47 வழக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
மொத்தமுள்ள 30 மாநில முதல்வர்களில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆகிய இருவர் மட்டுமே பெண்கள் ஆவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |