கட்டுப்பாட்டில் இல்லாமல் அந்த 7 நிமிடங்கள்... சந்திரயான்-3ன் திக் திக் நிமிடங்கள்
சந்திரயான் விண்கலமானது இன்றைய தினம் மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது. இது தொடர்பில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு ஒரு செய்தி ஒன்றை கூறியுள்ளனர்.
இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு
இந்தியாவில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். தரையிறங்குவதற்கான அனைத்து ஆயத்தங்களும் தயாராக இருப்பதாகவும்.
இதற்கான பணிகள் மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த செயன்முறையை விஞ்ஞானிகள் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.
மேலும் எப்படி தரை இறங்கும்? அடுத்து என்ன நடக்கும்? என்பது கடைசி 7 நிமிடத்தில் தெரியும். குறிப்பிட்ட 7 நிமிடமானது "7 மினிட்ஸ் ஆப் டெரர்" என்று கூறுகின்றார்கள்.
அந்த 7 நிமிடத்தில் விக்ரம் லேண்டர் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் நிலவின் மேற்பரப்பில் மிதக்கும். லேண்டர் முழுவதும் அதில் உள்ள சென்சார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் செயல்படும்.
இந்த சமயத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் தான் இருப்பார்கன் என தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |