சந்திரயான்-3 திட்டம் வெற்றி! புதிய விண்வெளி வர்த்தகத்தில் களமிறங்கிய இஸ்ரோ
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், புதிய விண்வெளி வர்த்தகம் வளர்ச்சி அடையும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சந்திரயான்-3 திட்டம்
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, லூனா-25-வை நிலவுக்கு அனுப்பிய போது தரையிறங்கமால் நொறுங்கியதால் ரஷ்யா தனது திட்டத்தில் தோல்வியடைந்தது. அதனால், உலக நாடுகள் அனைத்தும் சந்திரயான்-3 திட்டத்தை உற்றுநோக்கி கொண்டிருந்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று மாலை சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
விண்வெளி வர்த்தகம்
நிலவில் இதுவரை யாரும் ஆய்வுகள் மேற்கொள்ளாத பகுதியில் இஸ்ரோ ஆய்வு மேற்கொள்வதால் விண்வெளி தொழில் போட்டியில் இஸ்ரோவும் களமிறங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
விண்வெளி என்பது முன்பு போல இல்லாமல், தற்போது வர்த்தகத்திற்கு உண்டான இடமாக மாறிவிட்டது. அதுவும், நிலவின் தென்பகுதியில் இந்தியா தரையிறங்கியது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், அந்த பகுதியில் தான் தண்ணீர் இருக்கிறது. எதிர்காலத்தில் அந்த பகுதியில் காலனி உருவாகவும் வாய்ப்பு இருக்கிறது.
அதாவது, அங்கிருந்து தாது பொருட்களை பூமிக்கு எடுத்து வந்து வர்த்தகம் ஏற்படும். அதற்கு இஸ்ரோவின் இந்த ஆராய்ச்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதால் அந்நிய முதலீடுகள் 5 மடங்கு அதிகரிக்கும்.
மேலும், விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ உலகளவில் பெரும்பங்கு வகிக்கும் என்றும் கணிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |