நிலவில் இந்தியாவின் நடைப்பயணம் ஆரம்பம்: இஸ்ரோவின் புதிய அப்டேட்
நேற்று மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தை முத்தமிட்டது.
இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் வெளிவரத் தொடங்கியதன் மூலம் நிலவின் தென் துருவத்தை முதலில் அடைந்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதுதொடர்பில் பதிவு ஒன்றை இஸ்ரோ தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
பிரக்யானின் நடைப்பயணம்
நிலவின் தென்துருவத்தில் இந்தியா பிரக்யான் ரோவர் நடைபயணத்தை மேற்கொண்டது. இது தொடர்பான அப்டேட்டுகள் விரைவில் வரும் என இஸ்ரோ கூறியுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 24, 2023
Chandrayaan-3 ROVER:
Made in India ??
Made for the MOON?!
The Ch-3 Rover ramped down from the Lander and
India took a walk on the moon !
More updates soon.#Chandrayaan_3#Ch3
இதன்மூலம் முதன்முதலாக ரோவர் எடுக்கும் நிலவின் படத்தை வெளியிட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நிலவில் 14 நாட்கள் ஆய்வை மேற்கொள்ள இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |