சந்திரயான் 4 முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரை! இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது எதற்கெல்லாம்?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
கடந்த மார்ச் மாதம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சுமார் 18000 பக்கங்களுக்கும் அதிகமான அறிக்கையை சமர்பித்திருந்தது.
இந்த நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிவித்த இந்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்த அறிக்கையானது ஒரு மனதாக அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதில் முதற்கட்டமாக லோக்சபா மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதன் பின்னர் 100 நாட்களுக்குள் ஒத்திசைக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அடிக்கடி நடத்தப்படும் தேர்தல்களில் ஏற்படும் நிதி சுமையை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
அடுத்ததாக, சந்திரயான் 4 (Chandrayaan-4) திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் நிலவில் இருந்து மண் மற்றும் பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆராய்ச்சி செய்யவுள்ளது.
மேலும், வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் திட்டம் (Venus mission) போன்ற விண்வெளி துறை சார்ந்த பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
முக்கியமாக, இந்திய விண்வெளி நிலையம் (Indian space station) திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |