கருப்பான முகத்தை வெள்ளையாக மாற்றணுமா! காபி தூள் இருந்தா போதும்
பொதுவாக பெரும்பாலானோருக்கு முகம் வெள்ளையாக இருப்பது தான் பிடிக்கும். அதற்கு ஒரே ஒரு டீஸ்பூன் காபி தூள் இருந்தால் மட்டும் போதும். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
காபி தூளால் ஏற்படும் பலன்கள்
காபி தூள் ஆக்சிஜனேற்ற பண்புகளையும், அதிக அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. பிரபலங்கள் மத்தியில் காபி தூள் பேஸ் பேக்கிற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
நீங்கள் இயற்கையாக டானை அகற்றுவது எப்படி என யோசித்தால் காபி தூள் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இது, வீட்டில் எளிதாக கிடைக்க கூடிய பொருள். உடல் மற்றும் சருமத்திற்கு நல்லது. அதிக வெயிலினால் மாறிய கருப்பான முகத்தை மீண்டும் பளீச்சுன்னு மாற்ற இந்த காபி தூள் பேஸ்பேக் உதவும்.
Freepik
மேலும், இது ஒரு நல்ல எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும். மிகச்சிறந்த டான் ரீமூவல் பேஸ்பேக் எதுவென்றால் காபி தூள் தான்.
காபி தூள் & பால்
2 டேபிள் ஸ்பூன் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் காபி தூளை கலந்து, அதனை முகத்தில் தடவ வேண்டும். பின்பு 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவ வேண்டும்.
காபி தூள் & தேன்
2 டேபிள் ஸ்பூன் தேனுடன் 2 டேபிள் ஸ்பூன் காபி தூளை நன்றாக கலக்க வேண்டும். பின்பு அதனை முகத்தில் தடவ வேண்டும். அப்படியே 20 நிமிடங்கள் வைத்து விட்டு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
காபி தூள் & கற்றாழை
ஜெல் சிறிது காபி தூளுடன் கற்றாழை ஜெல்லை நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும். பின்பு, அந்த பேஸ்டை எடுத்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
காபி தூள் & எலுமிச்சை சாறு
காபி தூளுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீரை வைத்து கழுவ வேண்டும். தேவைப்பட்டால் எலுமிச்சை சாறுடன் தேனும் கலந்து கொள்ளலாம்.
Bebeautiful
காபி தூள் & ஓட்ஸ்
காபி தூளுடன் ஓட்ஸ் மற்றும் தயிர் கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்பு, அதனை ஸ்க்ரப் செய்யும் போது முகத்தில் உள்ள டான் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |