தமிழக அமைச்சரவையில் நடந்த மாற்றம்.., யார் யாருக்கு எந்த துறை?
தமிழக அமைச்சரவையில் செப் 28ஆம் திகதி அதாவது நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
இதில், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
மேலும், அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
யார் யாருக்கு எந்த துறை?
1. உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த பொன்முடி, தற்போது வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
2. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு, தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
3. ஆதிதிராவிடர் நலத்துறையைக் கவனித்து வந்த அமைச்சர் கயல்விழி செல்வராஜூக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.
4. ஏற்கனவே உள்ள மின்சாரத்துறை, தொல்லியல் துறை உள்ளிட்டவற்றுடன் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை ஆகிய துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
5. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு, மனோ தங்கராஜ் வகித்து வந்த பால் வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
6. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையைக் கவனித்து வந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு, தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |