2025 மார்ச் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பிரான்சில் பல மாற்றங்கள் நிகழவிருக்கின்றன. அவற்றில் சில முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
பட்ஜெட் மாற்றங்கள்
பிரான்ஸ் பிரதமரான François Bayrou தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விடயங்கள், இன்று, அதாவது, மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.
விமான டிக்கெட்கள் விலை உயர்வு
பட்ஜெட்டின் ஒரு பகுதியாக, பிரான்சிலிருந்து புறப்படும் விமானங்கள் மீது விதிக்கப்படும் சுற்றுச்சூழல் வரி அதிகரிக்க உள்ளது.
அந்த வரிவிதிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதால், விமான டிக்கெட்கள் விலையும் உயர்கிறது. உதாரணமாக, எக்கானமி வகுப்புக்கான டிக்கெட் விலை 7.40 யூரோக்கள் உயர்ந்துள்ளது.
எரிவாயு விலை
வீடுகளில் சமையலுக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு விலை மார்ச் மாதத்தில், சுமார் 1.79 யூரோக்களும், வீட்டை வெப்பப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் எரிவாயு விலை 2.23 யூரோக்களும் உயர இருக்கிறது.
எளிமையாக்கப்படும் RSA
The RSA (Revenu de solidarité active) என்னும் குறை வருவாய் அல்லது பகுதி நேரப் பணியாளர்களுக்கான உதவி பெறும் முறை இன்று முதல் எளிமையாக்கப்பட உள்ளது.
மருத்துவர் பரிந்துரைச்சீட்டு கட்டுப்பாடுகள்
இன்று முதல், tramadol மற்றும் codeine என்னும் உட்பொருட்களைக் கொண்ட மருந்துகளை வாங்குவதற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் பரிந்துரைச்சீட்டு மீது கடும் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.
பள்ளி விடுமுறைகள் முடிவு
பிரான்சில் பள்ளிப் பிள்ளைகளுக்கான குளிர்கால விடுமுறைகள் முடிந்து விட்டன.
Zone Aயிலுள்ள பள்ளிகள் இம்மாதம் 10ஆம் திகதியும், Zone Cயிலுள்ள பள்ளிகள் திங்கட்கிழமை, அதாவது, மார்ச் மாதம் 3ஆம் திகதியும் திறக்க உள்ளன. Zone Bயிலுள்ள பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன.
பிரான்ஸ் - இத்தாலி ரயில் இணைப்பு மீண்டும் துவக்கம்
மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல், பிரான்ஸ், இத்தாலி நாடுகளுக்கிடையிலான, பாரீஸ் நகரத்தை டியூரின் மற்றும் மிலன் நகரங்களுடன் இணைக்கும் பிரபல ரயில் பாதை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
புதிய விமான சேவை
பிரான்சின் Clermont-Ferrand Auvergne விமான நிலையம், மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல், லண்டன் Stansted விமான நிலையத்துக்கு புதிய விமான சேவையை துவக்க உள்ளது.
பாரீஸ் மேயர் தேர்தல்
பாரீஸ் மேயரான ஆன் ஹிடால்கோவின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து. புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் மார்ச் மாதம் 13ஆம் திகதி நடைபெற உள்ளது.
Winter ‘truce’ முடிவடைகிறது
வீடுகளில் வாடகைக்கு வசிப்போர் வாடகை செலுத்தமுடியாவிட்டாலும் வீட்டு உரிமையாளர்கள் அவர்களை வீட்டை காலி செய்ய வைக்க முடியாது என்னும், ’winter truce’ விதி, மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |