2023ஆம் ஆண்டில் பிரான்சில் புலம்பெயர்ந்தோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் மாற்றங்கள்
2023ஆம் ஆண்டு பல மாற்றங்களைக் கொண்டு வர இருக்கும் நிலையில், பிரான்சில் புலம்பெயர்ந்தோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கும் சில மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான உரிமைகள்
குடியிருப்பு அனுமதி பெற்றோரைப் பொருத்தவரை, குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், பிரான்ஸ் அரசு புதிய புலம்பெயர்தல் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
அதில், சுகாதாரத்துறை போன்ற பணியாளர் பற்றாக்குறை உள்ள துறைகளில் பணியாற்றுவோருக்காக புதுவகை குடியிருப்பு அனுமதி அட்டை ஒன்று, அந்த அட்டைக்கு விண்ணப்பிப்போருக்காக அடிப்படை மொழித்தேர்வு மற்றும் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டவர்களை வெளியேற்ற கடுமையான நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் இடம்பெற உள்ளன.
எல்லைக் கட்டுப்பாடுகள்
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்காக, இந்த ஆண்டு மே மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அவை குறித்து கீழ்க்கண்ட இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
https://news.lankasri.com/article/an-important-message-for-foreigners-1667650409
பிற மாற்றங்கள்...
சொத்து
ஜனவரி 1ஆம் திகதி முதல், சதுர மீற்றர் ஒன்றிற்கு 450kWH மின்சாரம் பயன்படுத்தக்ககூடிய வீடுகளை வைத்திருப்போர் அவைகளை வாடகைக்கு விட அனுமதியில்லை.
சுகாதாரம்
2023ஆம் ஆண்டில், பிரான்ஸ் சுகாதார அமைப்பு, ஒருவருடைய வாழ்வின் மூன்று முக்கிய கட்டங்களில், அதாவது, 25 வயது, 45 வயது மற்றும் 65 வயதில் இலவச மருத்துவப் பரிசோதனையை அறிமுகம் செய்ய உள்ளது.
பணம்
Livret A சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்கான வட்டி வீதம் மற்றும் பிரான்ஸ் குறைந்தபட்ச ஊதியம் முதல் பல அதிகரிக்க உள்ளன.
உணவகங்களில் ஒரு மாற்றம்
பிரான்சிலுள்ள ஃபாஸ்ட் புட் உணவகங்கள், உணவு பார்சல் செய்ய ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பெட்டிகளுக்கு பதிலாக, மறுசுழற்சி செய்யக்கூடிய பெட்டிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் சலுகை முடிவுக்கு வருகிறது
பிரான்சில், அரசு அளித்துவரும் எரிபொருள் மீதான சலுகைகள் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டன.