லியோ படத்தில் பிரியா ஆனந்த் கேரக்டர் இதுவா? ரகசியத்தை உடைத்த இயக்குநர் லோகேஷ்
நடிகர் விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ளது லியோ.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கூட்டணி அமைத்துள்ளார் விஜய்.
இந்நிலையில் லியோ திரைப்படத்தில் பிரியா ஆனந்த் கேரக்டரை வெளிப்படுத்தி இயக்குநர் லோகேஷ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.
பிரியா ஆனந்த்
விஜய் கேங்ஸ்டராக இணைந்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார் விஜய். இத்திரைப்படம் தொடர்பில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் லியோ படத்தில் நடிகை பிரியா ஆனந்த் இணைந்துள்ளார். இவர் இந்தப் படத்தில் இருந்தாலும் எந்த கேரக்டரில் நடித்திருப்பார் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த பிரியா ஆனந்த், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ள நிலையில்,லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இந்நிலையில் படத்தில் பிரியா ஆனந்த், இயக்குநரும் நடிகருமான கௌதம் மேனனின் மனைவியாக நடித்துள்ளதாக லோகேஷ் ரகசியத்தை உடைத்து ரசிகர்களின் எதிர்பார்பை மேலும் தூண்டியுள்ளார்.