வெற்றிக்கு எந்த மந்திரமும் இல்லை: இலங்கை கிரிக்கெட்டுக்கான நேரமிது - சரித் அசலங்கா
அணிக்காக பெரிய சதங்கள் அடிக்க விரும்புகிறேன் என, அவுஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்த பின் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்கா தெரிவித்தார்.
மகுடம் சூடிய இலங்கை
கொழும்பில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 281 ஓட்டங்கள் எடுத்தது.
குசால் மெண்டிஸ் 101 ஓட்டங்களும், அசலங்கா 78 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலியா 107 ஓட்டங்களுக்கு சுருண்டது.
துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னான்டோ மற்றும் ஹசரங்கா தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
நான் வெறும் 5வது துடுப்பாட்ட வீரர்
வெற்றிக்கு பின் பேசிய சரித் அசலங்கா, "வெற்றிக்கு எந்த மந்திரமும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அணிக்காக பெரிய சதங்களை அடிக்க விரும்புகிறேன், பின்னர் பந்து வீச்சாளர்கள் 3-4 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இன்று (நேற்று) குறைந்த பவுன்ஸ் இருந்தது. ஆனால் அவ்வளவு Seam இயக்கம் இல்லை. அவர்களும் நன்றாக பந்துவீசினர் என்று நினைக்கிறேன், ஆனால் இன்று எங்கள் நாள். நாங்கள் ஒரு நிலையான செயல்திறனை வெளிப்படுத்தினோம்.
நான் கேப்டன் பதவியைப் பற்றி நினைக்கவில்லை. நான் வெறும் 5வது துடுப்பாட்ட வீரர். இலங்கை கிரிக்கெட்டுக்காக எதிர்நோக்க வேண்டிய நேரம் இது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |