அபார சதம் விளாசிய குசால் மெண்டிஸ்! ருத்ர தாண்டவமாடிய இலங்கை கேப்டன்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குசால் மெண்டிஸ் சதம் விளாசினார்.
குசால் மெண்டிஸ் சதம்
கொழும்பில் நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
நிஷான் மதுஷ்கா 51 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, குசால் மெண்டிஸ் மற்றும் சரித் அசலங்கா பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Kusal Mendis brings up his 5th 💯 in ODIs.
— FanCode (@FanCode) February 14, 2025
A brilliant exhibition of flair and determination! 🔥 #SLvAUSonFanCode #SLvAUS pic.twitter.com/slJTS1EQwT
இந்த கூட்டணி 94 ஓட்டங்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய குசால் மெண்டிஸ் (Kusal Mendis) சதம் அடித்தார். இது அவரது 5வது ஒருநாள் சதம் ஆகும்.
101 (115) ஓட்டங்கள் எடுத்திருந்த அவர் ஆடம் ஜம்பா ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும் அதிரடியில் மிரட்டிய சரித் அசலங்கா (Charith Asalanka) அரைசதம் அடித்து ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.
அசலங்கா, லியானகே அதிரடி ஆட்டம்
அவர் ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் விளாசினார்.
அவருடன் சேர்ந்து சரவெடி ஆட்டம் ஆடிய ஜனித் லியானகே 21 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 281 ஓட்டங்கள் குவித்தது. ட்வர்ஷுய்ஸ், ஹார்டி, அபோட் மற்றும் ஜம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |