புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை: தொண்டு நிறுவனங்கள் கண்டனம்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக பிரித்தானியாவும் பிரான்சும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்நிலையில், புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த சர்ச்சைக்குரிய நவடிக்கை ஒன்றை பயன்படுத்த பிரான்ஸ் கலவரத் தடுப்பு பொலிசாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய நடவடிக்கை
ஆம், கூட்டத்தைக் கலைப்பதற்காக கலவரத் தடுப்பு பொலிசார் பயன்படுத்தும் water cannon என்னும் மக்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர் பீரங்கிகளை, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக பயன்படுத்த பிரான்ஸ் கலவரத் தடுப்பு பொலிசாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை மக்கள் மீது பீய்ச்சி அடித்தால், தண்ணீர் அவர்கள் மீது மோதியடித்து, அவர்களை நிலைகுலைந்து கீழே விழச்செய்யும்.
இந்நிலையில், இப்படி புலம்பெயர்வோருக்கு எதிராக தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்துவது மோசமான விடயம் என Care4Calais என்னும் அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனம் விமர்சித்துள்ளது.

பிரித்தானியா, அகதிகளை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதாக தெரிவிக்கும் Care4Calais அமைப்பைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், பிரான்சில் இப்படி அகதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசு நிதி உதவியும் செய்வதாக விமர்சித்துள்ளார்.
இது மனிதத்தன்மையற்ற செயல் என்றும் அதற்காக பிரித்தானிய அரசு வெட்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவில் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆக, தங்கள் நாட்டில் இந்த தண்ணீர் பீரங்கிகளுக்கு தடை விதித்துவிட்டு இன்னொரு நாட்டிலுள்ள இன்னொரு சமுதாயத்தினருக்கு எதிராக அதைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அரசு இருக்கவே கூடாது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |