மகாராணியாரிடம் திட்டு வாங்கிய சார்லசின் காதலி யார் தெரியுமா?
மன்னர் சார்லஸ் இளவரசி டயானாவை சந்திக்கும் முன் 20க்கும் அதிகமான பெண்களை காதலித்திருக்கிறார். ஏன் டயானாவின் சொந்த சகோதரி சாராவைக் கூட விட்டுவைக்கவில்லை அவர்.
சார்லசை மயக்கிய பெண்
டயானாவை சந்திக்கும்முன் சார்லஸ் காதலித்தவர்களில் முக்கியமான பெண் சப்ரினா (Sabrina Guinness). சார்லஸ் சப்ரினா மீது பைத்தியமாக இருந்தார் என்று கூட சொல்லலாம்.
இருவரும் இரகசியமாக சந்தித்துக்கொள்வது, சேர்ந்து வெளியே சுற்றுவது என நெருக்கமாக இருந்த சார்லசையும் சப்ரீனாவையும் பார்த்த இளவரசி மார்கரட்டே, இருவருடைய உறவும் சீரியஸானது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
Image: Tom Wargacki/WireImage
சார்லசின் காதலியைத் திட்டிய மகாராணியார்
ஆனால், ராஜ குடும்பத்தில் முக்கியமான ஒருவருக்கு சப்ரீனாவைப் பிடிக்கவில்லை. பிரித்தானியாவின் வருங்கால ராணி என்ற பதவிக்கு சப்ரீனா பொருத்தமானவர் அல்ல என மகாராணியார் கருதியதாக தெரிகிறது.
ஒருமுறை பால்மோரல் மாளிகைக்கு சப்ரீனா சென்றிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட நாற்காலியில் அவர் உட்கார, ’அதில் உட்காராதே, அது ராணி மேரியின் நாற்காலி’ என முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டாராம் மகாராணியார்.
இன்னொருபக்கம், இளவரசர் சார்லசை திருமணம் செய்துகொள்ள சப்ரீனாவும் அவசரப்படவில்லையாம். இருவரும் சேர்ந்து சுற்றிய காலத்தில், எனக்கு அவருடன் இருப்பது பிடித்திருக்கிறது, அதற்காக எங்களுக்கு நீங்களே திருமணம் செய்துவைத்துவிடாதீர்கள், அவர் இன்னமும் திருமணத்துக்குத் தயாராகவில்லை என்று சப்ரீனா கூறியதாக ஒரு தகவல் இருக்கிறது.
Image: Getty Images