புற்றுநோய் சிகிச்சை... சார்லஸ் மன்னர் வெளியிட்ட புதிய தகவல்
பிறக்கும் புத்தாண்டில் இருந்து தனது புற்றுநோய் சிகிச்சையை மருத்துவர்கள் குறைக்க இருப்பதாக சார்லஸ் மன்னர் நல்ல செய்தி ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
ஊக்கமளிக்கும்
சார்லஸ் மன்னருக்கு முதன்முதலில் நோய் கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், முதல் முறையாக தமது சிகிச்சையின் அடுத்த கட்டம் தொடர்பில் அவர் பதிவு செய்துள்ளார்.

தனிப்பட்ட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள 77 வயது சார்லஸ் மன்னர், தமது சிகிச்சையில் முன்னேற்றம் என்பது தொடக்ககால நோயறிதல், பயனுள்ள தலையீடு மற்றும் மருத்துவர்களின் உத்தரவுகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தனது புற்றுநோய் சிகிச்சை தொடர்பான செய்தி மற்ற நோயாளிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில்,
மன்னர் சிகிச்சைக்கு சிறப்பாக ஒத்துழைத்துள்ளதாகவும், சிகிச்சையைக் குறைப்பது என்பது முன்னெச்சரிக்கை கட்டத்தை கடந்துள்ளது என்பதைக் குறிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்கவிளைவுகள்
பிரித்தானிய மக்கள், புற்றுநோய் தொடர்பில் சந்தேகம் இருந்தால் வாய்ப்புகளை விரைவாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சார்லஸ் மன்னர் அறிவுறுத்தியுள்ளார்.
தொடக்கத்திலேயே அறிகுறிகளை உறுதி செய்வது, மிக சாதாரணமாக உயிர்களை மீட்டெடுக்க வாய்ப்பாக அமையும் என்றார். 77 வயதான சார்லஸ், பிப்ரவரி 2024 இல் தனது புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் முதல் முறையாக வெளிப்படுத்தினார்.

சில மாதங்கள் சிகிச்சையை அடுத்து, அவர் மீண்டும் பணிக்குத் திரும்பினார். இருப்பினும், சிகிச்சையின் பக்கவிளைவுகளால் அவதிப்பட்டு எட்டு மாதங்களுக்கு முன்பு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், இதனால் பல உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மன்னர் சார்லஸ் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வழக்கமான புற்றுநோய் சிகிச்சையைப் பெற்று வருகிறார். ஆனால், அவரது புற்றுநோய் வகையைப் போலவே, அவர் மேற்கொண்டு வரும் சிகிச்சை தொடர்பிலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |