அமெரிக்காவை அதிரவைத்த படுகொலை! அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம்
அமெரிக்காவில் சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சட்டங்களை மாற்றுவதற்கான அழுத்தம் கடுமையாக்கப்படுகிறது.
அமெரிக்காவில் அதிர்வலை
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) கல்லூரியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி உரிமைகளை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய வேட்டையாடும் உரிமை மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் "Game and Feral Animal" சட்டத் திருத்த மசோதா (பாதுகாப்பு வேட்டை) 2025ஐ எம்.பி. ராபர்ட் போர்சக் தாக்கல் செய்துள்ளார். இது மாநில சட்டத்தில் வேட்டையாடும் உரிமையை இணைக்க முயல்கிறது.
இந்த மசோதாவானது, ஒரு பாதுகாப்பு வேட்டை ஆணையத்தை (Conservation Hunting Authority) நிறுவும், உரிமம் பெற்ற வேட்டைக்காரர்களுக்கான பொது நிலங்களுக்கான அணுகலை விரிவுப்படுத்தும் மற்றும் Suppressorsஐ சட்டப்பூர்வமாக்குவதுடன் காட்டு விலங்குகளை கொல்வதற்கான வெகுமதியையும் வழங்கும்.
ராபர்ட் போர்சக் (Robert Borsak), வேட்டையாடுதல் தனது 'கலாச்சார உரிமை' என்றும், தனது மசோதா தானாகவே யாருக்கும் துப்பாக்கி உரிமையை வழங்காது' என்றும் தெளிவுபடுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |