ஐரோப்பாவில் மீண்டும் WhatsApp-ல் ChatGPT., மெட்டாவிற்கு EU உத்தரவு
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உத்தரவின் பேரில், ChatGPT மீண்டும் WhatsApp-ல் அறிமுகமாகியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு WhatsApp-ல் ChatGPT பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில், ஜூலை 13, 2026 முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
Meta நிறுவனம், 2025 அக்டோபரில் WhatsApp Business API விதிகளை மாற்றி, ChatGPT, Microsoft Copilot போன்ற AI உதவியாளர்களை தடை செய்தது. இதற்கு காரணமாக “சர்வர் சுமை அதிகரிப்பு” என விளக்கம் அளித்தது.

ஆனால், விமர்சகர்கள் இதை Meta-வின் சொந்த AI-ஐ முன்னிறுத்தும் முயற்சி எனக் கூறினர். இதற்கு எதிராக, ஜூன் 9, 2026 அன்று EU, Meta-க்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, WhatsApp API-யை மீண்டும் திறக்க கட்டாயப்படுத்தியது.
விதிகளை மீறினால் Meta-க்கு வருடாந்திர வருமானத்தின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இப்போது, EU பயனர்கள் WhatsApp-ல் 1-800-CHATGPT என்ற சரிபார்க்கப்பட்ட எண்ணின் மூலம் ChatGPT-ஐ நேரடியாகப் பயன்படுத்த முடிகிறது. இதில் உரையாடல், குரல் உள்ளீடு, படங்களைப் பதிவேற்றம், AI பட உருவாக்கம் போன்ற வசதிகள் WhatsApp-இல் கிடைக்கின்றன.
சில பயனர்கள், ChatGPT-ஐ பயன்படுத்திய பின் WhatsApp கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். OpenAI, “சரிபார்க்கப்பட்ட எண்ணை மட்டுமே பயன்படுத்துங்கள்” என அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |