சீனாவின் மலிவான இறக்குமதி - பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு
சீனாவின் மலிவான இறக்குமதியால் பிரித்தானியாவில் பணவீக்கம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால் சீனாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், அந்த நாடு தனது பொருட்களை மாற்று சந்தைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.
இதில் பிரித்தானியா முக்கிய இடமாக மாறி வருகிறது.
சீனாவின் மலிவு விலை கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஒலி உபகரணங்கள் பிரித்தானியாவிற்கு அதிக அளவில் வருவதால் அங்குள்ள பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் வர்த்தக உபரி முதல் முறையாக 1 டிரில்லியன் டொலரை கடந்துள்ளது.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி 29 சதவீதம் குறைந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 15 சதவீதம் மற்றும் பிரித்தானியாவிற்கு 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது பணவீக்கம் 3.2 சதவீதமாக உள்ளது. 2026 நடுப்பகுதிக்குள் 2 சதவீதம் இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த பட்ஜெட்டில் எரிசக்தி மற்றும் எரிபொருள் வரிகளில் தளர்வு வழங்கப்பட்டதால் பணவீக்கம் மேலும் 0.5 சதவீதம் குறையலாம்.
இங்கிலாந்து வங்கி (Bank of England) வட்டி விகிதத்தை 3.75 சதவீதமாகக் குறைத்துள்ளது. 2026-இல் மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது.
சீனாவிலிருந்து பிரித்தானியாவிற்கு 70 பில்லியன் பவுண்டு மதிப்பிலான பொருட்கள் வந்துள்ளன. இதில் கார்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஒலி சாதனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மலிவான இறக்குமதி காரணமாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகலாம்” என எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய அரசு உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளது.
சீனாவின் மலிவு இறக்குமதி பிரித்தானியாவில் விலைகளை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவலாம். ஆனால் இது உள்ளூர் தொழில்துறைக்கு சவாலாக மாறும் அபாயமும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK inflation news, Chinese imports UK, Trump tariffs impact, UK economy 2026 forecast, Bank of England rate cut, UK trade with China, UK headline inflation drop, Catherine Mann inflation statement, Rachel Reeves budget inflation, UK import prices moderation