தங்க விலை குறைவாக இருக்கும் நாடு.., இந்தியாவிற்கு கொண்டுவருவது எப்படி?
பொதுவாகவே பலரும் தங்கத்தை சொத்தின் ஒரு பகுதியாக பார்ப்பதுண்டு. இந்தியாவை பொறுத்தளவில் தங்கம் தான் சேமிப்பின் மிகப் பெரியதாக இருக்கிறது.
ஆனால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து செல்வதால், பலரும் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர்.
ஆனால் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவை விட ஒரு சில நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாகவே காணப்படுகிறது.
குறைவான விலையில் தங்கம் இருக்கும் நாடு
துபாய்
22 கேரட் தங்கம் ஒரு கிராம் 296.25 திர்ஹாமாக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 6,830.73 ரூபாயாக இருக்கிறது. அதேபோல 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 320 திர்ஹாமாக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.7378 ஆகும்.
மலாவி
22 கேரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ. 6500 என்ற அளவில் இருக்கிறது. 24 கேரட் தங்கம் அங்கு ஒரு கிராம் சுமார் ரூ.7105ஆக இருக்கிறது.
ஆஸ்திரேலியா
22 கேரட் தங்கம் ஒரு கிராம் 124.80 ஆஸ்திரேலிய டாலர்களாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.6,815ஆக இருக்கிறது. மறுபுறம் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 136.10 ஆஸ்திரேலிய டாலராக (இந்திய மதிப்பில் 7,427.26 ரூபாய்) இருக்கிறது.
கொலம்பியா
இங்கு இன்று ஒரு கிராம் தங்கம் 22 கேரட் 3,284,100 கொலம்பிய பெசோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6535 என்ற அளவில் இருக்கிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 3,585,260 கொலம்பிய பெசோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 7134 என்ற அளவில் இருக்கிறது.
இந்தோனேசியா
24 கேரட் தங்கம் 13,274,000 இந்தோனேசிய ரூபியா ஆகும். அதாவது ரூபாய் மதிப்பில் ரூ. 7168 ஆகும். 22 கேரட் தங்கம் 12,159,000 இந்தோனேசிய ரூபியாக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.6565 ஆகும். இது தவிர கம்போடியா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியாவை விடத் தங்கம் விலை குறைவாகும்.
அங்கிருந்து கொண்டுவருவது எப்படி?
நீங்கள் ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சில பொருட்களை கொண்டு செல்வதற்கு பல சட்டத்திட்டங்கள் உண்டு. அதுபோலவே தங்கத்தை கொண்டு வருவதற்கும் தங்கத்தை கொண்டு செல்வதற்கும் சில கட்டுப்பாட்டுகள் உள்ளன.
அதன்படி, பெண் பயணிகள் 40 கிராம் (அதிகபட்ச மதிப்பு ஒரு லட்சம் வரை), ஆண் பயணிகள் 20 கிராம் (அதிகபட்ச மதிப்பு ரூ.50,000வரை) எடுத்து வரலாம்.
மேலும் அவ்வாறு கொண்டு வருபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டில் இருந்திருக்க வேண்டும். அதையும் மீறி எடுத்து வந்தால், அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |