கொரோனா தடுப்பூசி பெறுவதற்காக இளம்பெண்கள் செய்த மோசடி... வெளியான வீடியோ
அமெரிக்காவில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக மோசடி செய்த இரண்டு பெண்கள் சிக்கினார்கள்.
ப்ளோரிடாவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த இரண்டு பெண்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்த சுகாதாரத்துறையினர் உடனே பொலிசாரை அழைத்தார்கள்.
இணையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த அவர்கள் இருவரும், தாங்கள் 65 வயதைத் தாண்டியவர்கள் என்று தெரிவித்திருந்தார்கள்.
வயதானவர்கள் போல் உடையணிந்து, முகக்கவசம் மாஸ்க் என முகத்தை மறைத்திருந்தாலும், அவர்களது அடையாள அட்டை அவர்களுக்கு வயது 34 மற்றும் 44 என்பதைக் காட்டிவிட்டது.
பொலிசார் வந்து விசாரித்ததில், ஏற்கனவே இதேபோல் மோசடி செய்துதான் அவர்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டிருந்ததும் தெரியவந்தது.
முன்னுரிமை அளிக்கப்பட்டு, கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டிய அத்தியாவசிய சூழலில் இருக்கும் முதியோர்களின் தடுப்பூசி போடும் வாய்ப்பை ஏமாற்றி பறிக்க முயன்றதாக அவர்களை கடிந்துகொண்ட பொலிசார், அவர்களை அங்கிருந்து துரத்தியடித்தனர்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலையிலிருந்து அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பியுள்ளதாக தெரிவித்த பொலிசார், மீண்டும் இங்கே வந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் எச்சரித்தார்கள்.
என்றாலும், இந்த விடயம் கவனம் ஈர்த்துள்ளதால், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், எவ்வித குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என உறுதியாக தெரியவில்லை.


