இன்னும் கொஞ்சம் நேரத்தில் வீழ்ந்துவிடும்... புடின் ஆதரவு செசன்ய தலைவர் அறிவிப்பு
உக்ரைனின் மரியூபோல் நகரம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வீழ்ந்துவிடும் என புடின் ஆதரவு செசன்ய தலைவர் தெரிவித்துள்ளார்.
புடின் ஆதரவாளரும், செசன்யாவின் தலைவருமான Ramzan Kadyrov என்பவர், மரியூபோல் நகரம், இன்று மதிய உணவு வேலைக்கு முன் அல்லது பின் ரஷ்யப் படைகளிடம் வீழ்ந்துவிடும் என்று கூறியுள்ளார்.
மரியூபோலில் தற்போது சுமார் 1,000 பேர் மட்டுமே Azovstal ஸ்டீல் தொழிற்சாலை என்னும் இடத்தில் பதுங்கியிருக்கிறார்கள்.
ரஷ்யப் படைகள் அந்த இடத்தை நெருங்கி வரும் நிலையில், இன்று மதிய உணவு வேளைக்கு முன்போ அல்லது பின்போ ரஷ்யப் படைகள் அந்த தொழிற்சாலையை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும் என செசன்யாவின் தலைவரான Kadyrov தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் தளபதிகளில் ஒருவரான Serhiy Volny என்பவர், Azovstal ஸ்டீல் தொழிற்சாலையில் இருக்கும் வீரர்களால் வெகு நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.