அமெரிக்க தரைப்படை வந்தால்.. ஈரானுக்கு ஆதரவாக களமிறங்க உள்ள செச்சென் ராணுவப் பிரிவு
அமெரிக்க தரைப்படை ஈரானுக்கு வந்தால் ஈரானுக்கு ஆதரவாக சண்டையிடுவோம் என செச்சினிய இராணுவப் பிரிவு எச்சரித்துள்ளது.
தரைப்படையை அனுப்ப திட்டமிடும் ட்ரம்ப்
ஈரான் மற்றும் இஸ்ரேல் அமெரிக்கா இடையேயான போர், ஒரு மாதத்தை கடந்தும் நீடித்து வருகிறது.
ஏற்கனவே ஈரானின் ஆதரவு அமைப்புகளான ஹிஸ்புல்லா மற்றும் ஹௌதி லெபனான் மற்றும் ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானின் செறிவூட்டப்பட்ட கார்க் தீவு மற்றும் ஹார்மோஸ் நீரிணையை கைப்பற்ற அமெரிக்க தரைப்படையை ஈரானிற்குள் அனுப்புவது குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார்.
ஈரானிற்குள் அமெரிக்கப்படைகள் நுழைந்தால் அவர்களின் கால்கள் வெட்டப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அப்படி ஈரானிற்குள் அமெரிக்க தரைப்படைகள் நுழைந்தால், ஈரானுக்கு ஆதரவாக சண்டையிட ஈரானுக்கு செல்வோம் என செச்சினிய இராணுவப் பிரிவு எச்சரித்துள்ளது.
செச்சினிய இராணுவப் பிரிவு
ரஷ்யாவில் உள்ள செச்சினியாவை தளமாக கொண்டு இயங்கும் ராணுவ பிரிவே செச்சினிய இராணுவப் பிரிவு அலலது கதிரோவைட்டுகள் என அழைக்கப்படுகிறது.
ரஷ்யாவின் தென்பகுதியில் அமைந்துள்ள செச்சினியாவை சுதந்திர நாடாக நிறுவும் நோக்கில், உந்தப்பட்டு, ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிரான நீண்டகால கிளர்ச்சியில் இருந்து செச்சினிய கிளர்ச்சி இயக்கம் உருவானது.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில், ஜொகர் டுடாயேவின் தலைமையில் செச்சினியா ரஷ்யாவிடமிருந்து தனது சுதந்திரத்தை அறிவித்தது.
2ஆம் செச்சினியா போருக்கு பின்னர், ரஷ்யா மீண்டும் செச்சினியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.
தற்போது புடினின் ஆதரவாளரான ரம்ஜான் கடிரோவ் செச்சினியாவின் தலைமை பொறுப்பில் உள்ளார்.

செச்சினிய இராணுவப் பிரிவு உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிட்டது. ஏற்கனவே, ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா உளவு தகவல்களை வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |