உலகை நடுங்கவைத்த கொள்ளைநோய் மீண்டும் அமெரிக்காவில்?
ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 30 முதல் 60 சதவிகிதத்தை காணாமல்போகச் செய்த கருப்பு மரணம் என அழைக்கப்படும் கொள்ளைநோய் மீண்டும் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
உலகை நடுங்கவைத்த கொள்ளைநோய் மீண்டும் அமெரிக்காவில்?
1346க்கும் 1353க்கும் இடையில் பல நாடுகளில் கருப்பு மரணம் (Black Death) என அழைக்கப்படும் பிளேக் (bubonic plague) என்னும் கொள்ளைநோய் பயங்கரமாக பரவியது.
ஐரோப்பாவில் அது சுமார் 50 மில்லியன் உயிர்களை பலிவாங்கியது.
யெர்சினியா பெஸ்டிஸ் (Yersinia pestis) என்னும் பாக்டீரியாதான் இந்த நோயை உருவாக்குகிறது.
பொதுவாக விலங்குகளைத் தாக்கும் இந்த நோய், பாதிக்கப்பட்ட விலங்குகளைக் கடித்த fleas என்னும் உன்னிப்பூச்சிகள் மனிதர்களைக் கடிக்கும்போதும், பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்போதும் அவை விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும்.
கடந்த மாதம், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வாழும் ஒருவர் பிளேக் தொற்றால் உயிரிழந்தார். அந்தப் பகுதியில், prairie dog என்னும் ஒருவகை அணில் வகை விலங்கு உயிரிழந்த நிலையில், அதுதான் இந்த கொள்ளைநோய் பரவலுக்குக் காரணமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, சமீபத்தில் அரிசோனாவுக்கு அருகிலுள்ள கொலராடோ மாகாணத்தில், வீடொன்றில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று பிளேக் நோய்க்கு பலியாகியுள்ளது.
ஆகவே, அமெரிக்காவில் பிளேக் நோய் பரவுகிறதோ என்னும் அச்சம் உருவாகியுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், ஐரோப்பாவில் பிளேக் பரவியபோது ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிடையாது.
ஆனால், தற்போது ஆன்டிபயாட்டிக்குகள் பயன்பாட்டில் உள்ளன. விடயம் என்னவென்றால், பிளேக் நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், அதை ஆன்டிபயாட்டிக் சிகிச்சை மூலம் அதை குணமாக்கிவிட வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், நோய்வாய்ப்பட்ட, உயிரிழந்த மற்றும் வனவிலங்குகளை நெருங்கவேண்டாம் என அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.
அத்துடன், செல்லப்பிராணிகளை சுதந்திரமாக வெளியே நடமாட அனுமதிப்பதால், பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து அவற்றிற்கு தொற்றுநோய் பரவக்கூடும் என்பதால், செல்லப்பிராணிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |