ஃபிபா கிளப் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய செல்ஸி! படுதோல்வியடைந்த PSG
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியை வீழ்த்தி செல்ஸி அணி கிளப் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
கோல் பால்மர் மிரட்டல்
ஃபிபா கிளப் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி நியூ ஜெர்ஸியின் MetLife மைதானத்தில் நடந்தது.
இத்தாலியின் செல்ஸி (Chelsea) மற்றும் பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் (Paris Saint-Germain) கிளப் அணிகள் இதில் மோதின.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் செல்ஸி வீரர் கோல் பால்மர் (Cole Palmer) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 30வது நிமிடத்திலும் அவரே இரண்டாவது கோலினையும் அடித்தார்.
செல்ஸி சாம்பியன்
இதற்கு பதில் கோல் அடிக்க PSG அணி வீரர்கள் போராட, அடுத்த அடியாக ஜோவா பெட்ரோ (Joao Pedro) 43வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதன்மூலம் முதல் பாதியில் செல்ஸி அணி முன்னிலை வகித்தது. ஆனால் இரண்டாம் பாதியில் PSG வீரர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
எனினும், செல்ஸின் அரணை உடைத்து அவர்களால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் செல்ஸி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |