டோக்கியோ 2020: பிரித்தானியாவின் முதல் பதக்கத்தை வென்ற செல்சி கில்ஸ்!
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தானியாவுக்காக முதல் வெண்கல பதக்கத்தை செல்சி கில்ஸ் (Chelsie Giles) வென்றுள்ளார்.
பெண்களுக்கான 52 கிலோ ஜூடோ போட்டியில், சுவிட்சர்லாந்தின் ஃபேபியான் கோச்சரை (Fabienne Kocher) தோற்கடித்து, Team GB-க்கான முதல் வெண்கலத்தை கில்ஸ் வென்றுள்ளார்.
24 வயதாகும் செல்சி கில்ஸ், மத்திய இங்கிலாந்தின் கோவென்ட்ரி (Coventry) நகரத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியைத் தொடர்ந்து பேசிய கில்ஸ் "ஜப்பானில் இதைச் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது ஒரு அற்புதமான அரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் ஆச்சரியமாக இருந்தது.
எனது சண்டைகளில் எதையும் நான் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கும், நான் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வதற்கும் நான் சண்டைக்குச் செல்கிறேன். எனது சிறந்த செயல்திறன் மூலம், சில சிறந்த வீரர்களை வெல்ல முடியும் என்று எனக்குத் தெரியும் இன்று, நான் அதைக் காட்டினேன்" என்றார்.