பிரித்தானியாவில் போலி labubu பொம்மைகள்: கொடிய இராசாயனம் குறித்த அவசர எச்சரிக்கை
பிரித்தானியாவில் போலி labubu பொம்மைகள் குறித்த அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
போலி labubu பொம்மைகள்
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் குழந்தைகள் மத்தியில் labubu Bag Charms பொம்மைகளின் விற்பனையும் கடைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
பெரும்பாலான இடங்களில் labubu பொம்மைகள் விற்று தீர்ந்து வருகின்றன, பல இடங்களில் தேவை அதிகரிப்பு காரணமாக labubu பொம்மைகளின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதிக விலை மற்றும் குறைவான விநியோகம் காரணமாக சந்தைகளில் Lafufus போன்ற போலியான பொம்மைகள் குவிந்து வருகின்றன.
இதன் குறைந்த விலை காரணமாக பெற்றோர்களும் இதனை மலிவான மாற்றாக கருதி வாங்கிச் செல்கின்றனர்.
அபாயமான இரசாயனங்களின் எச்சரிக்கை
இந்நிலையில், இந்த போலியான பொம்மைகள் பாதுகாப்பு ஆய்வுகளில் கவலைக்குரிய முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளன.
ஆய்வுகளின் படி, பறிமுதல் செய்யப்பட்ட பொம்மைகளில் 75% பொம்மைகள் பாதுகாப்பு சோதனையில் தோல்வி அடைந்துள்ளன.
மேலும் இந்த பொம்மைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளின் படியே, இந்த போலி பொம்மைகளை வாங்கிய 46% பேர் கடுமையான பாதுகாப்பு சிக்கலை எதிர்கொண்டு இருப்பதாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போலி பொம்மைகளில் கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளும் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |