திடீரென காணாமல் போன குடும்பம்; தமிழகத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் ஒரு குடும்பமே திடீரென காணாமல் போன நிலையில் அருள்வாக்கு சொல்லப்போவதாக எழுதிய கடிதம் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே திம்மாவரம் பகுதியில் குணசேகரன் வசுமதி தம்பதியினர் தங்களது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர்.
வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாத நிலையில், வீட்டின் கதவுகள் திறந்திருந்ததால், அக்கம்பக்கத்தினர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் வீட்டை சோதனை செய்தபோது அந்த கடிதம் கிடைத்துள்ளது.
அதில் குடும்பத்தினருடன் ஹீலிங் செய்வதாகவும், வீட்டை விட்டு வெளியேறி ஒவ்வொரு கோவிலாக சென்று அருள்வாக்கு சொல்வோம் என்றும் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, வசுமதியின் தந்தை இறந்தபிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் மனநலம் பாதித்தது போன்று இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.