சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டபுள் டக்கர் பேருந்து - எப்போது தொடக்கம்? வழித்தடம்?
சென்னையில் மீண்டும் பயன்பாட்டிற்கு வர உள்ள டபுள் டக்கர் பேருந்தின் தொடக்க திகதி, வழித்தடம் குறித்து பார்க்கலாம்.
சென்னையில் டபுள் டக்கர் பேருந்து
சென்னையில் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில் ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், டபுள் டக்கர் பேருந்து சேவையை மீண்டும் செயல்படுத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 1980 முதல் 2008 ஆம் ஆண்டு வரை டபுள் டக்கர் எனப்படும் இரட்டை மாடி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.
#381st Madras Day Celebrations!🎊🥳💐🎇🎉
— TNSTC Enthusiasts (@tnstcbus) August 22, 2020
Celebrating Madras - Chennai!🎉❤️#Reshared🖼️
🚌 Double Decker Bus
🚍MTC #Chennai (Division - 1)
TN O1 N 2414
🚍Depot: Alandhur
🚍Fleet_Code: ALG888
🚍SC: 78 Sitting + 10 Standing
🚍Chassis: Ashok Leyland - Titan
TNSTC Enthusiasts pic.twitter.com/hr5e6E3k3W
அதன் பின்னர் அதிகரித்த பராமரிப்பு செலவு மற்றும் மேம்பால கட்டுமானம் பணிகளால் 2008 ஆம் ஆண்டில் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது.
தற்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த டபுள் டக்கர் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம், கடந்த சில வாரங்களே சென்னையில் நடைபெற்று வந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
எப்போது தொடக்கம்? வழித்தடம்?
இந்நிலையில், வரும் ஜனவரி 12 ஆம் திகதி நடைபெற உள்ள அயலக தமிழர்கள் தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டபுள் டக்கர் பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.
During the #CMStalinInUS trip our Honourable CM @mkstalin avargal urged the diaspora to help the tourism sector in all ways possible. Upon this request the #TamilDiaspora responded positively and promised to raise funds for a Sightseeing bus. The dept of Industries investment… pic.twitter.com/yaRuBODq3V
— Dr. T R B Rajaa (@TRBRajaa) January 7, 2026
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு உதவுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்காவில் வசித்து வரும் புலம்பெயர் தமிழர்கள் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.
அசோக் லேலண்ட் நிறுவனமும் தனது CSR கொள்கை மூலம் நிதியளித்துள்ளது. மேலும், 20 பேருந்துகளை வாங்க டென்டர் வெளியிடபட்டுள்ளது.
முதற் கட்டமாக, அடையாறு முதல் மாமல்லபுரம் வரையும், தாம்பரம் - பிராட்வே வழித்தடத்திலும், இயக்கப்படவுள்ளது.
இந்த ஏசி பேருந்துகளானது, காற்று மாசுவை குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான பேருந்துகளை விட இதில் அதிகளவிலான பயணிகளை ஏற்றி செல்ல முடியும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |