பதவி,பணம் இருந்தா Boat வருது.. No food, Water: வெள்ளத்தில் சிக்கிய இளைஞரின் வலி நிறைந்த கோபம்
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால், இளைஞர் ஒருவர் தனக்கு நேர்ந்த துயரமான சம்பவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்பு
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதில், குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம்,முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இளைஞரின் கோபம்
இதில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் பதவி, பணம் இருந்தால் மட்டும் Boat வருகிறது. எங்களை போல் உள்ளவர்களுக்கு உதவுவதற்கு யாரும் முன்வரவில்லை என வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த இளைஞர், "நாங்கள் குடியிருந்த பகுதியில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது.வீடுகள் சுற்றி சில பாம்புகள் இருந்தன. தனியாக ஒரு படகு வந்து ஒரு குடும்பத்தை மட்டும் அழைத்துச் சென்றது. பணம், பதவி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.
உணவு, தண்ணீர் கூட இல்லை. எங்கள் நண்பர்கள் இருவர் படகு கொண்டு வந்து அழைத்துச் சென்றனர். எல்லாரையும் ஒரே மாதிரி நடத்துங்கள்" என்று வலியோடு ஆதங்கமாக பேசியுள்ளார். அவர் பேசிய காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |