துபாய் லொட்டரில் ஜாக்பாட் அடித்த தமிழர்! அவர் கூறிய விடயம்
துபாய் லொட்டரியில் சென்னையைச் சேர்ந்த சக்தி விநாயகம் 24.5 லட்சம் ஜாக்பாட் அடித்தார்.
துபாயில் 20 ஆண்டுகள்
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சக்தி விநாயகம் என்பவர் துபாயில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவர் துபாயில் தங்குமிடப் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். சக்தி விநாயகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக the Big Ticket லொட்டரி வாங்கி வருகிறார்.
இந்த நிலையில், அவருக்கு லொட்டரி குலுக்கல் நிகழ்ச்சி தொகுப்பாளிடம் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.
ரூ.24.5 லட்சம்
அதில் அவருக்கு ஜாக்பாட் விழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, சக்தி விநாயகம் ரூ.24.5 லட்சம் வென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வெற்றி பெற்ற அழைப்பு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பரிசுப் பணத்தை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு பெரிய தொகையை வெல்லும் நம்பிக்கையில் தொடர்ந்து Big Ticket வாங்குவேன்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |