கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொன்ற காதலன் தப்பியோட்டம்: 7 தனிப்படை அமைப்பு
சென்னை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி விட்டு காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர் ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ் (23) என்பவர், உயிரிழந்த பெண் அதே பகுதியை சேர்ந்த சத்தியா (20) என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை-கொடூர காதலனை பிடிக்க பொலிஸார் 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல்களின்படி, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 2-ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்தியாவும், அவரது காதலன் என கூறப்படும் சதீஷும் இன்று (வியாழக்கிழமை) மாலை பரங்கிமலை ரயில் நிலையத்தில் வழக்கம்போல பேசிக்கொண்டிருக்கும்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, கோபமடைந்த சதீஷ் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தண்டவாளத்தில் விழுந்த சத்யா தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தள்ளிவிட்ட காதலன் சதீஷ் அங்கிருந்து உடனடியாக தப்பியோடினார்.
இந்நிலையில், மாணவியை ரயில் முன் தள்ளி கொன்றுவிட்டு தப்பிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே பொலிஸார் சார்பாக 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.