தூள் கிளப்பிய ருதுராஜ்! KKR-யை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
2024 ஐபிஎல் தொடரின் 22வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதல் பந்து முதல் அதிர்ச்சி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் துஷார் தேஷ்பாண்டே வின் முதல் பந்திலேயே அவுட் ஆனது அந்த அணிக்கு அதிர்ச்சியான தொடக்கமாக அமைந்தது.
On Roar Duty Today! ??#CSKvKKR #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/7bBv9TDBGF
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2024
நிதான ஆட்டம், அதிரடி தொடக்கம்!
சுனில் நரைன்(27 ஓட்டங்கள்) - அங்கிரிஷ் ரகுவன்ஷி(24 ஓட்டங்கள்) ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
பின்னர் வந்த ஸ்ரேயஸ் ஐயர் - ரிங்கு சிங் ஜோடி சிறிது வேகத்தை ஏற்ற முயன்றாலும், ரிங்கு சிங், ரஸல், ஸ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஸ்ரேயஸ் ஐயர் மட்டும் 32 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்து அணியை ஓரளவு மீட்டார்.// இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
CSK அபார வெற்றி
138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ஓட்டங்களையும், சிவம் துபே 28 ஓட்டங்களையும் குவித்து அபார அடித்தளம் அமைத்தனர்.
ருதுராஜ் 45 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து அசத்தினார். துபே 18 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் விளாசி அதிரடியாக விளையாடினார்.
#RutuThala is all we wanted to see today! ??#CSKvKKR #WhistlePodu #Yellove ??
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2024
pic.twitter.com/RhmF8hyaSJ
17வது ஓவரில் துபே வெளியேறினாலும், ருதுராஜ் கடைசி வரை களத்தில் நிலைத்து நின்றார். தோனி (1*) களமிறங்கி நிதானமாக விளையாடி அணி வெற்றிக்கு உறுதுணை புரிந்தார்.
இறுதியில் 17.4 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
CSK vs KKR IPL 2024 Highlights, Ruturaj Gaikwad, Chennai Super Kings win, Shivam Dube, MS Dhoni, Kolkata Knight Riders lose, Sunil Narine bowling, IPL latest results, Chennai win over KKR