பிரான்ஸில் 15 வயது பள்ளி மாணவன் கொலை: திடுக்கிட வைக்கும் காரணம்?
பிரான்சில் 15 வயது பள்ளி மாணவன் ஷாம்செடின் கொலை வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸில் 15 வயது சிறுவன் கொலை
பிரான்சில் 15 வயது பள்ளி மாணவன் ஷாம்செடின்(Shamseddine) டீன் ஏஜ் இளைஞர்கள் கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது பள்ளி மாணவன் ஷாம்செடின்(Shamseddine) கொலை வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நாடு தழுவிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரான்ஸ் பள்ளிகளில் நிலவும் வன்முறை குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.
15 வயது சிறுவனுக்கு என்ன நடந்தது?
பாரிஸின் தெற்கில் Viry-Chatillon எனும் பகுதியில் உள்ள தனது பள்ளியை விட்டு ஷாம்செடின் வெளியேறும் போது, இரண்டு சகோதரர்கள் உட்பட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
துர்திஷ்டவசமாக ஷாம்செடின் மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டாலும் வெள்ளிக்கிழமை மதியம் கடுமையான காயம் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
தாக்குதலுக்கான காரணம் தாக்குதலாளர்களின் தங்கையை சுற்றிய "பாலியல் சார்ந்த பிரச்சனைகள்" என வழக்கு தொடுத்துள்ள வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.
கைது செய்யப்பட்ட டீன் ஏஜ் இளைஞர்கள்
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மறுநாள் வெள்ளிக்கிழமையில் ஐந்து பேர் காவலில் வைக்கப்பட்டனர். இதில் குற்றத்தை தடுக்க தவறியதற்காகவும் ஒரு சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்று 17 வயது சிறுவர்கள் மற்றும் 20 வயது டீன் ஏஜ் சிறுவர் ஒருவர் என நான்கு பேர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரான்சின் கல்வி அமைச்சர் நிக்கோல் பெல்லோபட்(Nicole Belloubet) சமூக வலைத்தளத்தில் நாட்டின் துக்கத்தை வெளிப்படுத்தி, "முழு நாடும் துக்கத்தில் உள்ளது" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |