ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : சென்னை - டெல்லி அணி இன்று நேருக்கு நேர் மோதல்
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை - டெல்லி அணி இன்று நேருக்கு நேர் மோத உள்ளன.
சென்னை - டெல்லி அணி இன்று நேருக்கு நேர் மோதல்
தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டிப்போட்டுக் கொண்டு களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகிறது.
ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
@airnewsalerts
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 6 வெற்றியும், 4 தோல்வியும் அடைந்துள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட புள்ளி நிலவரப் பட்டியலில் சென்னை அணி 2-வது இடத்தை பெற்றுள்ளது.
அதேபேல், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்கள் விளையாடியுள்ளது. இதில், 4 வெற்றியும், 6 தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளி நிலவரப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இப்போட்டியை காண சென்னை சேப்பாக்கம் பகுதி முழுவதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற படையாக ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர்.
?Chennai Super Kings will lock horns against Delhi Capitals in Match 55 of the IPL, 2023 on Wednesday, May 10, 2023, at MA Chidambaram Stadium, Chennai.? pic.twitter.com/GeFXAamQR2
— Adelia kumar (@IPLWINJULIET7) May 10, 2023
#CSKvsDC Chennai Super Kings vs Delhi Capitals, 55th Match Today 730 PM #TATAIPL2023 | #CSKvsDC#IPL #IPL2023 #IPLSchedule #IPLtickets #TATAIPL #TATAIPL2023 #RCBvDC #Delhicapitals #Gujarattitans #RCB #Punjabkings #RR #KKR #CSK #CSKVSRR pic.twitter.com/tkaJ6O513j
— PlayIPLT20 (@playiplt20) May 10, 2023