ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- ரசிகர்கள் மகிழ்ச்சி
ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
டெல்லியை வீழ்த்திய சென்னை அணி
தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டிப்போட்டுக் கொண்டு களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கத்தில் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் நாணய முறை சுழற்றியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தில் இறங்கியது.
@GuggariKishor
களத்தில் இறங்கிய கேப்டன் தோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக மாஸ் காட்டி விளையாடினார். 9 பந்துகளில் 2 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், 20 ஓட்டங்களிலேயே அவர் அவுட்டானார். இப்போட்டியின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ஓட்டங்களை எடுத்தது.
இதன் பின்பு, 169 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளத்தில் இறங்கியது. இப்போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் இறங்கிய டெல்லி அணி சொற்ப ஓட்டங்களிலேயே அவுட்டானது.
இதனையடுத்து, இப்போட்டியின் முடிவில் டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்து சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. இதனால், 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி, சென்னை அணி தன்னுடைய 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
@spauntyevents
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. தற்போது, 7 வெற்றியும், 4 தோல்வியும் பதிவு செய்துள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட புள்ளி நிலவரப் பட்டியலில் சென்னை அணி 2-வது இடத்தை பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை
இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. அதாவது, எந்த ஒரு வீரரும் 25 ஓட்டங்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
நேற்று நடந்த ஆட்டத்தில் ஷிவம் துபே 12 பந்துகளில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன் பின்பு, 25 ஓட்டங்களை எடுத்து அவுட்டானார். ஷிவம் துபே மட்டும் தான் அதிகபட்சமாக 25 ஓட்டங்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@ChennaiIPL