சூறாவளி போல் பந்தை சுழன்று அடித்து நொறுக்கிய CSK! டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது
இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாபெரும் வெற்றி பெற்றது.
பந்தை தெறிக்க விட்ட சென்னை அணி வீரர்கள்
16வது ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த இத்தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி சென்று விட்டது. ஆனால், பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணி பிளே ஆப் சுற்றியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டன.
இந்நிலையில், இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
@ChennaiIPL
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி சுலபமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இதனால், துடுப்பாட்டம் வென்ற சிஎஸ்கே அணி களத்தில் முதலில் இறங்கியது. கெய்ஜ்வாட்டும், கான்வேவும் டெல்லி அணியின் பந்தை அடித்து நொறுக்கி சிக்ஸர் மழை பொழிந்தார். இவரின் ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.
மிரட்டல் வெற்றி
டெல்லியை வீழ்த்திய சென்னை இப்போட்டியின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 223 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 224 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி 146 ஓட்டங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து சுருண்டது.
இதனால், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தற்போது, ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
IPL Poster for Chennai Super Kings. pic.twitter.com/eeKqKD95Sy
— Johns. (@CricCrazyJohns) May 20, 2023
? WE LOVE YOU JADDU BHAI ?#WhistlePodu #Yellove #DCvCSK ??pic.twitter.com/pAD52GBE4T
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2023