CSK அணி ரசிகர்கள் செம்ம மாஸ் - புகழ்ந்து தள்ளிய பஞ்சாப் அணி வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பஞ்சாப் அணி வீரர் சிக்கந்தர் ராஸா நெகிழ்ந்து பேசியுள்ளார்.
சேப்பாக்கத்தில் தோனியை பார்த்து ஆர்ப்பரித்த CSK ரசிகர்கள்
இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்தப் போட்டியில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.
இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய கடைசி லீக் ஆட்டமாகும். எனவே, இப்போட்டி முடிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
தோனி ரசிகர்களை பார்த்து நன்றி என்று தெரிவித்தபோது, ரசிகர்கள் தோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். அப்போது மைதானத்தில் தோனி நடந்து வந்த போது, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கினர்.
CSK ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய சிக்கந்தர் ராஸா
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பஞ்சாப் அணி வீரர் சிக்கந்தர் ராஸா புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
‘நான் ஐபிஎல் தொடரில் பல மைதானங்களில் சென்று விளையாடி வருகிறேன். ஆனால், நான் விளையாடியதிலேயே ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருந்த மைதானம் சேப்பாக்கம் மைதானம் தான்.
ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலிருந்து ஆட்டம் முடியும் வரை, கடைசி வந்து வரைக்கும் சென்னை அணிக்கு தங்கள் ஆதரவை ரசிகர்கள் தந்தார்கள். இந்த சூழலில் நான் விளையாடியது எனக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது' என்றார்.