சென்னைக்கு வர உள்ள புல்லட் ரயில்; மணிக்கு 120 கி.மீ வேகம் - எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
சென்னை உள்ளிட்ட தென் இந்திய நகரங்களுக்கு புல்லட் ரயில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் புல்லட் ரயில்
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய ரயில்வேயும், ரயில் சேவையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலே, இந்தியாவின் அதிவேக ரயிலாக உள்ளது.
அதேவேளையில், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் புல்லட் ரயிலை இந்தியாவில் இயக்க இந்திய ரயில்வே பணிகளை தொடங்கியுள்ளது.
மும்பை மற்றும் அஹமதாபாத் இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயில், 2028 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஜப்பான் சென்ற இந்தியா பிரதமர் மோடி, ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் அங்குள்ள புல்லட் ரயிலில் பயணம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, இந்தியாவில் 7000 கிலோ மீட்டர் நீள அதிவேக ரயில் வலையமைப்பை உருவாக்கும் லட்சியத்தை வெளிப்படுத்தியுள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
இந்நிலையில், தென்னிந்தியாவில் புல்லட் ரயில் கொண்டு வருவதற்கான கணக்கெடுப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்த ரயில் அமராவதி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய 4 நகரங்களை இணைக்கும். இதன் மூலம், 5 கோடி மக்கள் பயன் அடைவார்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னை - பெங்களூரு, சென்னை - ஹைதராபாத் இடையேயான பயண தூரம் 2 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மும்பை - அஹமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் காலக்கெடுவை அடிப்படையாக கொண்டு இந்த திட்டத்திற்கு பயன்பாட்டிற்கு வர 15 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |