சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி நடத்துவது ஏன்? BBL தலைவர் விளக்கம்
சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி நடத்துவது ஏன் என BBL தலைவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி
2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன.

முதல்முறையாக BBL போட்டி அவுஸ்திரேலியாவிற்கு வெளியே நடத்தப்பட உள்ளது. இதே போல் ஒரு வெளிநாட்டு பிரான்சைஸ் தொடரின் போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்ட உள்ளது.
2026 BBL தொடரின் தொடக்கப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னரே, அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகிகள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்ததோடு, பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்திய பிரதமர் மோடி அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற ஒரு நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
போட்டி நடைபெற உள்ள திகதி, நேரம்
சென்னையில் டிசம்பர் 12 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் விளையாட உள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.40 மணிக்கு இந்த போட்டி தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்கார்ச்சர்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ், கூப்பர் கொன்னோலி ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஷ் இங்லிஸ், ஜை ரிச்சர்ட்சன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால், அவர்களையும் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது.
சென்னையில் நடத்த காரணம்
இது குறித்து பேசிய BBL நிர்வாகப் பொது மேலாளர் அலிஸ்டர் டாப்சன், "இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில், கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் பேசிய அனைவரும், நல்ல கூட்டம் வரும் என எதிர்பார்க்கலாம் என மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிகழ்வை நாங்கள் கட்டமைத்தபோது, இந்தியாவில் பிபிஎல் ஏற்கனவே எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பது எங்களுக்குத் தெளிவாகியுள்ளது.
ஐபிஎல்க்கு ஈடாகாது என்றாலும், பிபிஎல் மிகவும் விரும்பப்படும் ஒரு தொடராகும். கூட்டத்தில் கணிசமான அளவு மஞ்சள் நிற உடைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அவுஸ்திரேலியாவில் தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள், இது ஒரு பிபிஎல் போட்டி போலவே தோற்றமளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
ஒரு ஐபிஎல் போட்டியை இங்கு நடத்துவதற்கான ஆர்வம் அரசு மற்றும் கிளப்களிடையே உள்ளது. நேரம் வரும்போது அந்தக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான வாய்ப்பை, நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். ஏனெனில், அவுஸ்திரேலியாவில் ஐபிஎல்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |