ரஷ்ய வீரர்களுக்கு உருவாகியுள்ள பிரச்சினை: வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்
செர்னோபில்லில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய வீரர்களுக்கு கதிரியக்க நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 24ஆம் திகதி உக்ரைனை ரஷ்யா ஊடுருவியபோது, ரஷ்யப் படையினர் செர்னோபில்லில் அணு மின் நிலையம் இருக்கும் பகுதியைக் கைப்பற்றுவதாக எண்ணி அங்கு முகாமிட்டனர்.
அவர்களது கனரக வாகனங்கள் பயணிக்கும்போது பயங்கரமாக தூசியைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, சிவப்பு வனம் என அழைக்கப்படும் பகுதிக்குள் அவர்கள் சென்றுள்ளனர்.
செர்னோபில்லைச் சுற்றி சுமார் 65 மைல் தூரத்துக்கு, மண்ணில் கதிரியக்க கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. ஆகவேதான், அந்த வனப்பகுதி சிவப்பு வனம் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது செர்னோபில் அணுமின் நிலையத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய வீரர்கள் பலருக்கு கதிரியக்க நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளது.
அந்த சிவப்பு வனம் என்ற பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய வீரர்களின் வாகனங்கள் பெருமளவில் தூசியைக் கிளப்பியதால் அவர்கள் உடலில் கதிரியக்க நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்த கதிரியக்கப் பகுதியைக் கண்காணிக்கும் ஏஜன்சியைச் சேர்ந்த Yaroslav Yemelianenko என்பவர், மற்றொரு கூட்டம் ரஷ்யப் படைகள் பெலாரஸ் நாட்டிலுள்ள கதிரியக்க சிகிச்சை மையம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த ரஷ்ய வீரர்கள் முறையான பாதுகாப்பு உடைகள் அணியாமல் இருந்ததுடன், பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் பின்பற்றாததே அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு காரணம் என கருதப்படுகிறது.
கடுமையான ஆத்திரத்தில் உள்ள புடின்! நம்பிக்கையை இழந்துவிட்டார்... முக்கிய தகவல்