செர்னோபில் அணுமின் நிலையத்தில் மீண்டும் கொடி ஏந்திய உக்ரைன் வீரர்
ரஷ்ய துருப்புகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, சுற்றியுள்ள மாவட்டம் மீண்டும் கைப்பற்றப்பட்ட பின்னர், செர்னோபிலில் உக்ரேனிய இராணுவ வீரர் ஒருவர் கொடி ஏந்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அதிரடி படையெடுப்பின் தொடக்கத்தில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட வடக்கு ப்ரிபியாட் பகுதி மீண்டும் உக்ரேனிய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதை அதிகாரிகள் தரப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவலில், மார்ச் 3ம் திகதி உக்ரைனின் ஆயுதப் படைகளின் பிரிவு ஒன்று பெலாரஸ் குடியரசுடன் எல்லையைப் பங்கிடும் ப்ரிபியாட் மாவட்டத்தை கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வார இறுதியில் ரஷ்ய துருப்புகள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேறியதாக உக்ரைன் கூறியது, கடுமையான இழப்பு மற்றும் கதிர்வீச்சு பாதிப்பு காரணமாகவே ரஷ்ய துருப்புகள் வெளியேறியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்ய பின்வாங்கல் உக்ரைனுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதப்படுகிறது. குறித்த ஆலையில் அணுசக்தி ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில், ஊழியர்கள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டனர்.
மட்டுமின்றி சரியான ஓய்வு இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இதனிடையே கதிர்வீச்சு காரணமாக ரஷ்ய இராணுவ வீரர் ஒருவர் இறந்த சம்பவமும் வெளியானது.