வறுத்து அரைத்த செட்டிநாடு சிக்கன் கிரேவி: ரெசிபி இதோ
செட்டிநாடு சிக்கன் கிரேவி என்பது தென்னிந்தியா முழுவதும் உள்ள உணவகங்களில் பிரபலமான உணவாகும்.
இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி, சாதம், நெய் சாதம் , ரொட்டி, தோசை, இட்லி, பூரி, பரோட்டா உடன் நன்றாக இருக்கும்.
இந்த சுவாயான செட்டிநாடு சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Adobe Stock
தேவையான பொருட்கள்
- சிக்கன்- 1kg
- தேங்காய்- 1 கப்
- வெங்காயம்- 3
- தக்காளி- 4
- காய்ந்த மிளகாய்- 15-20
- மிளகு- 1/4 ஸ்பூன்
- தனியா- 3/4 ஸ்பூன்
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு- 3
- ஏலக்காய்- 3
- கருப்பு ஏலக்காய்- 3
- பிரிஞ்சி இலை- 2
- கல் பாசி- 5
- சோம்பு- 3/4 ஸ்பூன்
- சீரகம்- 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 3/4 ஸ்பூன்
- மல்லித்தூள்- 3/4 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கருவேப்பிலை- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, சீரகம், தனியா, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, கருப்பு ஏலக்காய், மிளகு, கல் பாசி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்து பொருட்களை நன்கு ஆறவைத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, பட்டை, லவங்கம், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து தக்காளி சேர்த்து வதங்கியதும் அதில் மஞ்சள், தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 1/2 தடம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தொடர்ந்து அதில் சிக்கன் சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும். பின் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
பின் இதில் வறுத்து அரைத்து வைத்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறி சிக்கனை வேகவைக்கவும்.
சிக்கன் நன்கு வெந்து வந்ததும் அதில் நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து 1/4 டம்ளர் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |