நாவூறும் சுவையில் செட்டிநாடு முட்டை பொடிமாஸ்: ரெசிபி இதோ
உடலுக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் அனைத்தும் முட்டையில் இருக்கின்றன.
முட்டையில் வைட்டமின் ஏ , வைட்டமின் பி5, வைட்டமின் பி12 , பாஸ்பரஸ், வைட்டமின் பி2, செலினியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
அந்தவகையில், முட்டை வைத்து நாவூறும் சுவையில் செட்டிநாடு முட்டை பொடிமாஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முட்டை- 5
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகுத் தூள்- ½ ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிதளவு
- கொத்தமல்லி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகத்தைப் போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போனவுடன் அதில் கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
பின் இதில் உப்பு மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |