Chettinad Fish Fry: அரைத்து வைத்த செட்டிநாடு மீன் வறுவல்: இனி இப்படி செய்யுங்கள்
அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று மீன். மீன் பிடிக்காத ஒருவரை கூட பார்ப்பது அரிதான விஷயம்.
காலை, மதியம், இரவு என மூன்று நேரம் மீன் கொடுத்தாலும் நம்மில் பலர் சலிக்காமல் சாப்பிடுவோம்.
அந்தவகையில், அரைத்து வைத்த சுவையான மீன் வறுவல் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மீன்- 5 துண்டு
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 6 பல்
- சீரகம்- 1 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கார்ன் ப்ளார்- 1½ ஸ்பூன்
- அரிசி மா- 1 ஸ்பூன்
- எலுமிச்சை- ½
- கறிவேப்பிலை- 2 கொத்து
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் அதில் மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் எண்ணெய் சேர்த்து அரைத்து அதில் கார்ன் ப்ளார், அரிசி மாவு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
இறுதியாக இதில் சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்து மீன் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான மீன் வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |