நாவூறும் சுவையில் செட்டிநாடு பால் பணியாரம்.., எப்படி செய்வது?
செட்டிநாடு சமையல் காரசாரமான உணவுகளுக்கு மட்டுமல்லாமல் இனிப்பு வகைகளுக்கும் பெயர் பெற்றது.
செட்டிநாடு உணவுகளில் பால் பணியாரம் மிகவும் பிரபலமான இனிப்பு வகை.
அந்தவகையில், சுவையான செட்டிநாடு பால் பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- உளுந்து- 1 கப்
- தேங்காய்- 1
- சர்க்கரை- தேவையான அளவு
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- 1 சிட்டிகை
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்து சேர்த்து 2 முறை நன்கு கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் இதனை மிக்ஸி ஜாரில், ஊறவைத்த உளுந்து, அரிசி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதனையடுத்து தேங்காய் பாலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்த மாவை சிறிது சிறிது உருண்டையாக சேர்த்து பொறித்து எடுக்கவும்.
இறுதியாக பொரித்த பணியாரத்தை தேங்காய் பாலில் சேர்த்து கலந்தால் சுவையான செட்டிநாடு பால் பணியாரம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |