செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ கிரேவி: ரெசிபி இதோ
வாழைமரத்தின் இலை, பூ, காய், தண்டு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குபவை.
வாழைப்பூ மூலக்கடுப்பு, மலச்சிக்கல், வாய்ப்புண், செரிமானமின்மை , சிறுநீரக பிரச்சனை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்வதற்கு வாழைப்பூ மிகவும் பயன்படுகிறது.
வாழைப்பூவை பயன்படுத்தி செட்டிநாடு ஸ்டைலில் கிரேவி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- வாழைப்பூ - 1
- சின்ன வெங்காயம் - 5
- காய்ந்த மிளகாய் - 5
- பூண்டு பல் - 5
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை-1 கொத்து
- கொத்தமல்லி - 1 கொத்து
- புளி - எலுமிச்சை பழ அளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், பூண்டு பல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் நறுக்கிய வாழைப்பூ, உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து 5 - 7 நிமிடத்திற்கு வதக்கவும்.
மசாலா வாசம் மாறும் நிலையில் இதில் புளி கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
கிரேவி நன்கு கொதிக்கும் நிலையில் இதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி தழைகளை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான வாழைப்பூ கிரேவி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |