தித்திக்கும் சுவையில் செட்டிநாடு இனிப்பு பணியாரம்.., எப்படி செய்வது?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த செட்டிநாடு இனிப்பு பணியாரத்தை விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் செட்டிநாடு இனிப்பு பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- உளுந்து- 2 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- வெல்லம்- ¾ கப்
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- சிறிதளவு
- தேங்காய்- ½
- நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 முறை நன்கு கழுவி ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை இரவு முழுக்க புளிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து மாவுடன் ஏலக்காய் தூள், உப்பு மற்றும் வெல்லப்பாகு சேர்த்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து அரைத்த மாவில் நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகளை சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக பணியார சட்டியில் நெய் சேர்த்து மாவை ஊற்றி பணியாரம் சுட்டு எடுத்தால் சுவையான செட்டிநாடு இனிப்பு பணியாரம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |