எட்டு பேரைக் கொன்ற சீரியல் கில்லர்: ஒரு திடுக் செய்தி
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், தன்னுடன் தகராறு வைத்துக்கொண்ட எட்டு பேரை திட்டமிட்டு வரிசையாக கொலை செய்ததாக 46 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எட்டு பேரைக் கொன்ற சீரியல் கில்லர்
பொலிசாரால் சீரியல் கில்லர் என சந்தேகிக்கப்படும் அந்த நபரின் பெயர் ராம் சஹாய் ஜெய்ஸ்வால்.

ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி, ஜெய்ஸ்வால், கார்த்திக் குமார் என்பவரை தனது வீட்டுக்கு மது அருந்த அழைத்துள்ளார்.
கார்த்திக்குக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
ஜெய்ஸ்வாலுடன் மது அருந்திய கார்த்திக் வீடு திரும்பியதும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது, தான் ஜெய்ஸ்வாலுடன் மது அருந்திய விடயம் குறித்து தனது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டுள்ளார் கார்த்திக்.
ஏற்கனவே ஜெய்ஸ்வாலுடன் மது அருந்திய பலர் உயிரிழந்த நிலையில், அது குறித்து கார்த்திக் வீட்டாரும் அக்கிராமத்தினரும் பொலிசாரிடம் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

விசாரணையில், ஜெய்ஸ்வாலுடன் மது அருந்திய 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், அவர்கள் யாரும் மது அருந்தியவுடன் உயிரிழக்கவில்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகே உயிரிழந்துள்ளார்கள்.
அத்துடன், உயிரிழந்தவர்கள் வீட்டுக்குச் செல்லும் ஜெய்ஸ்வால், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கும், இறுதிச்சடங்குகள் செய்வதற்கும் உதவியுள்ளார்.
ஆக, யாருக்கும் ஜெய்ஸ்வால் மீது சந்தேகம் வராமலே இருந்துள்ளது.
விசாரணையில், கடந்த நான்கு மாதங்களில் உயிரிழந்த எட்டு பேருக்கும், உயிர் தப்பிய குமாருக்கும் கூட ஜெய்ஸ்வாலுடன் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துள்ளது.
ஆக, விஷம் ஒன்றை வாங்கிவைத்துக்கொண்டு, தன்னுடன் பிரச்சினை செய்தவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தன் வீட்டுக்கு அழைத்து, விஷம் கலந்த மதுபானத்தை அவர்களுக்குக் கொடுத்துள்ளார் ஜெய்ஸ்வால்.
கார்த்திக் வீட்டார் எழுப்பிய சந்தேகத்தைத் தொடந்து ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன் கொல்லப்பட்ட எட்டு பேரின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |